search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ்"

    • அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது.
    • இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி அசத்தியது.

    லண்டன்:

    இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

    இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 263 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மட்டுமின்றி, தொடரையும் கைப்பற்றியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 10 ஓவர் பந்துவீசி ஒரு மெய்டனுடன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    முதலாவது இன்னிங்சில் 4-வது ஓவரின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது 2 பேர் ஸ்லிப்பில் இருந்தனர். அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை.

    அடுத்த பந்தின்போது ஸ்லிப்பில் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் ஹோப். இதனால் கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த ஓவரை ஜோசப் மெய்டன் ஓவராக வீசினார்.

    பீல்டிங் செட் செய்வது குறித்து கேப்டன் ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப்பிடம் எதுவும் தெரிவிக்காததால் அந்த ஓவர் முடிந்தபின் ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறினார். பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றார்.

    அல்ஜாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறியதால், மாற்று வீரர் யாரும் களமிறங்க முடியாத சூழலால் அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். இதனால் பார்வையாளர்கள், நடுவர்கள் மத்தியில் குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    இந்நிலையில், கேப்டனுடன் வாக்குவாதம் செய்துவிட்டு காரணம் சொல்லாமல் மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

    • முதல் ஒருநாள் போட்டி நாளை ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெறுகிறது.
    • ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    முதல் ஒருநாள் போட்டி நாளை ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெறுகிறது. நவம்பர் 2 ஆம் தேதி 2 ஆவது போட்டியும் 6 ஆம் தேதி 3 ஆவது போட்டியும் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாய் ஹோப் தலைமையிலான அணியில் ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஷிம்ரன் ஹெட்மையர், அல்ஜாரி ஜோசப், ஷர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமரியோ ஷெப்பர்ட், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 128 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதியில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜார்ஜியா பிளிம்மர் அதிக பட்சமாக 33 ரன்கள் எடுத்தார். சூஸ் பெட்ஸ் 26 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் தியேந்திரா டோடின் 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். அந்த அணியின் தியேந்திரா டோடின் ஓரளவு போராடி 33 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    • முதலில் ஆடிய வங்கதேசம் 103 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி பெற்றது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிகர் சுல்தானா அதிகமாக 39 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கரீஷ்மா 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 12.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 34 ரன்கள் எடுத்தார்.

    நடப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

    • டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த அந்த அணி 99 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. அந்த அணியின் அலிசா லிஸ்டர் மட்டும் 26 ரன்கள் எடுத்தார் .

    100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 11.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதல் பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • ஸ்டஃபைன் டெய்லர் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் ஹேலே மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் முறையே 10 மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டஃபைன் டெய்லர் பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் இணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்களை எடுத்தது.

    ஸ்டஃபைன் டெய்லர் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய நொன்குலேகோ லாபா 4 விக்கெட்டுகளையும், மரிசேன் கப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீராங்கனைகளான கேப்டன் லாரா வொல்வூராட் மற்றும் டாஸ்மின் ப்ரிட்ஸ் முறையே 59 மற்றும் 57 ரன்களை அடித்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டி, 91 டி20 போட்டிகளில் விளையாடி 5293 ரன்கள் எடுத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. இவர் 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார்.

    தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 24-ந் தேதி நடைபெற்ற போட்டியின் போது பிராவோவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்த அவர் பாதியில் வெளியேறினார். அந்த போட்டியில் அவர் விளையாடி அணி தோல்வியடைந்தது. அதுதான் அவரது கடைசி போட்டி என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து பிராவோ ஓய்வு பெறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

    இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டி, 91 டி20 போட்டிகளில் விளையாடி 5293 ரன்கள் எடுத்துள்ளார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார். அப்போது ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பாராத வகையில் அரையிறுதி வரை முன்னேறியது. இதற்கு முக்கிய காரணமாக பிராவோ பார்க்கப்பட்டார்.



    • வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா இடையே 1வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 357 ரன்களை சேர்த்தது. பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 233 ரன்களையே எடுத்தது.

    124 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து 154 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டோனி டி ஜோர்ஜி 14 ரன்னுடனும், எய்டன் மார்க்ரம் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    ஐந்தாம் நாளில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 29 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட் மற்றும் மிகைல் லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிராத்வைட் ரன் எடுக்காமலும், மிகைல் லூயிஸ் 9 ரன்னும் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

    அடுத்து களமிறங்கிய கீசி கார்டி 31 ரன்களையும், அலிக் அத்தானாஸ் 92 ரன்களையும், கவேம் ஹாட்ஜ் 29 ரன்களிலும் அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56.2 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் சமனில் முடிக்கப்பட்டது.

    இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 15 ஆம் தேதி கயானாவில் தொடங்க இருக்கிறது.

    • இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களை பாகிஸ்தான் குவித்தது.
    • உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை 2024 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.

    இந்த லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்ரான் அக்மல் மற்றும் சர்ஜீல் கான் இந்திய அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். 30 பந்துகளில் 72 ரன்கள் குவித்து சர்ஜீல் கான் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கம்ரான் அக்மல் 77 ரன்களும் சோயப் மக்சூத் 51 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை பாகிஸ்தான் அணி குவித்தது.

    244 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், சோயப் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த சர்ஜீல் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    • கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பார்படோஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    உலகக் கோப்பை முடிந்து பார்படோஸில் இருந்து இன்றிரவு இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், பார்படோஸில் கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பார்படோஸ் விமான நிலையம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விமான நிலையம் மூடப்பட்டதால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக இந்தியா திரும்ப ஆயத்தமான இந்திய அணி வீரர்கள், ஊடகவியாலாளர்கள் குழு பார்படோஸில் சிக்கியுள்ளது.

    • கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம்.
    • கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

    ஆண்டிகுவா:

    டி20 உலகக்கோப்பை தொடரில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியுள்ளது.

    இதன் மூலமாக சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியுள்ளது.

    இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் நாங்கள் நுழையாவிட்டாலும் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட் போட்டிகளை ஆடினோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு பேட்டிங் குழுவாக இன்றைய ஆட்டத்தை மறக்க நினைக்கிறோம். பவுலர்கள் கொஞ்சம் கூட மனம் தளராமல் கட்டுப்படுத்தலாம் என்று போராடினார்கள். அது பாராட்டுக்குரியது. நாங்கள் இந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை.

    ஆனால் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி மீதான நம்பிக்கை எங்கள் ரசிகர்களுக்கு மீண்டும் வந்துள்ளதை பார்க்க முடிகிறது. தோல்வியின்போது, பாசிட்டிவான விஷயமாக அதனை பார்க்கிறேன். வெவ்வேறு மைதானங்களில் விளையாடியபோது ரசிகர்கள் நேரடியாக ஆதரவு அளித்ததோடு, சோசியல் மீடியாவில் கொண்டாடினார்கள் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.

    இவ்வாறு ரோமன் பவல் கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார்.
    • ஷம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது.

    இதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார். இவருடன் களமிறங்கிய ஷாய் ஹோப் ரன் ஏதும் எடுக்காமலும், நிக்கோலஸ் பூரன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் 52 ரன்களை விளாசினார்.

    இவரை தொடர்ந்து வந்தவர்களில் ஆண்ட்ரே ரசல் மட்டும் 9 பந்துகளில் 15 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளையும், யான்சென், மார்க்ராம், கேசவ் மகராஜ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்க வீரரான ஹென்டிரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குவின்டன் டி காக் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். தென் ஆப்பிரிக்கா 2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 15 ரன் எடுத்த போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மழை நின்றதால் போட்டி மீண்டும் துவங்கியது. ஆனால் மழை காரணமாக போட்டி தடைப்பட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    இதை அடுத்து பேட்டிங் செய்த கேப்டன் மார்க்ரம் 18 ரன்களையும், ஸ்டப்ஸ் 29 ரன்களையும் அடித்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கிளாசன் 22 ரன்களையும், மார்கோ யான்சென் 21 ரன்களையும் அடித்தனர்.

    இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி  டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்றைய போட்டியில் தோல்வியுற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    ×